Categories
தேசிய செய்திகள்

திருவிழா…. திருமணம்…. இவற்றுக்கெல்லாம் தடை….மத்திய அரசு அதிரடி…!!

இந்தியாவில்  சிறிது காலத்திற்கு ஊர் திருவிழா, திருமண நிகழ்வு உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இரண்டாம் நிலை கட்டத்தில் மட்டுமே இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருந்த பட்சத்தில்,

தற்போது அதிகரித்து வருகிறது. இத்தனை பாதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் திருமண நிகழ்வுகளிலும் கோவில் திருவிழாக்களிலும் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் பங்கேற்றது தான் என்ற உண்மை தெரியவந்ததையடுத்து திருமண நிகழ்ச்சிகள், மத வழிபாடு தொடர்பான பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது. மீறி நடத்துவோர் மீது நோய் பரப்பும் தண்டனை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |