Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BANvIND : 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா கிடையாது…. பிசிசிஐ அறிவிப்பு.!!

வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது..

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஒரு நாள் தொடரை 1:2 என்ற கணக்கில் வங்கதேச அணியிடம் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது இந்திய அணி.. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய அணி. இந்த போட்டியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆடாததால் கேப்டனாக  கே.எல் ராகுல் அணியை வழி நடத்தினார்.. எனவே அடுத்த போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கையில் ஏற்பட்ட காயம் சரியாகாத நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே டாக்காவில் நடைபெறும் 2ஆவது டெஸ்ட் போட்டியிடும் இந்திய அணியை ராகுல் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |