Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BANvIND : 2ஆவது டெஸ்ட் போட்டி…. “ரோஹித் சர்மா, சைனி விலகல்”….. இந்திய அணி இதுதான்..!!

ரோஹித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் இருந்து வெளியேறினர்..

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியுள்ளார். கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார் ரோஹித் சர்மா. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை, அதேபோல வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியும் இடம்பெறவில்லை.  ரோஹித் சர்மா விலகியுள்ளதால் கேப்டனாக கே.எல் ராகுல், துணை கேப்டனாக புஜாரா செயல்படுவர் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்காவில் வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது ரோஹித் சர்மாவுக்கு இடது கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். இந்திய கேப்டன் முழு தீவிரத்துடன் பேட்டிங்,  பீல்டிங் செய்வதற்கு காயம் முழுமையாக குணமடைய இன்னும் சில காலம் தேவை என்று மருத்துவக் குழு கருத்து தெரிவித்துள்ளது. அவர் தனது மறுவாழ்வைத் தொடருவார், மேலும் வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார்.

அதேபோல வயிற்று தசைப்பிடிப்பு காரணமாக நவ்தீப் சைனியும் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் இப்போது அவரது காயம் குறித்து NCA க்கு அறிக்கை தாக்கல் செய்வார்.

வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி  :

கே.எல்.ராகுல் (கே), ஷுப்மன் கில், செட்டேஷ்வர் புஜாரா (து.கே), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (WK), கே.எஸ்.பாரத் (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், சௌரப் குமார், ஜெய்தேவ் உனத்கட்.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஒரு நாள் தொடரை 1:2 என்ற கணக்கில் வங்கதேச அணியிடம் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது இந்திய அணி.. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |