Categories
தேசிய செய்திகள்

கணவருக்கு தெரிந்து விட்டது… கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி..!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை அவரது மனைவியே கொலை செய்து விட்டு  நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ராஜஸ்தானின் பார்மர் (Barmer) மாவட்டத்தை சேர்ந்த தீன்கர் (Deengarh) பகுதியில் பப்பு தேவி என்ற 30 வயது பெண் தன் கணவரான 35 வயது மதிக்கத்தக்க மனராம் (Manaram) என்பவருடன் வசித்து வந்துள்ளார்.. இந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் 15ஆம் தேதி கணவரின் சகோதரருக்கு போன் செய்து, தனது  கணவர் பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்த போது, மனராம் காலில் இரத்தம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்..  என்ன ஆச்சு.. என்ன நடந்தது.. என்று குடும்பத்தினர் பப்பு தேவியிடம் கேட்ட போது, அவர் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக கூறியுள்ளார். அதன் பின் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் வந்து உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்..  அதன் பின்னர் அவரின்  உடல் தகனம் செய்யப்பட்டது.

இருப்பினும் குடும்பத்தினருக்கு மனராம் மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் நிலவியதால் பப்புதேவியிடம் அவர் மரணம் தொடர்பாக தொடர்ந்து கேள்விகேட்டுள்ளனர். இந்த நிலையில் தான் அவர் மரணமடைந்து 12 நாட்களுக்கு பின் பப்புதேவி குடும்பத்தினரிடம் நான் தான் இதற்கு காரணம் என்று குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

பப்பு தேவி கூறியதாவது, தான் ஹனுமன்ராம் என்பவருடன் கள்ள உறவு வைத்திருந்ததாகவும் , அதுபற்றி கணவருக்கு தெரிந்து விட்டதால், காதலன் ஹனுமன்ராமுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறியுள்ளார்.

மேலும் முதலில் தூக்க மாத்திரைகளை கொடுத்தோம் என்றும், அதன் பின் அவர் மீது மின்சார கம்பியை வைத்து கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனை ஹனுமன்ராமும் ஒப்புக் கொண்டதாவும், இறந்தவரின் சகோதரர் இருவர் மீதும் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |