Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாங்க சரியா இருக்கான்னு பார்க்க வந்தோம்… ஏமாற்றம் அடைந்த மதுப்பிரியர்கள்… சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது திடீரென டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை திறந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள முள்ளுவாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் காலை திடீரென கடையை திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது கடை திறந்து இருப்பதைப் பார்த்த மதுப்பிரியர்கள் கடைக்கு சென்று மதுபானம் கேட்டுள்ளனர்.

அதற்கு ஊழியர்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடை திறக்க கூடாது என்றும் நாங்கள் பூட்டு சரியாக உள்ளதா என்று பார்த்து விட்டு கடைக்கு சீல் வைக்க வந்துள்ளோம் என்று கூறி கடையை பூட்டி விட்டு அங்கிருந்து ஊழியர்கள் சென்றுள்ளனர். மேலும் முழு ஊரடங்கின் போது திடீரென கடை திறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |