அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா திரைத்துறையின் மிக உயரிய விருதான எம்மி விருதை வென்றுள்ளார்.
அமெரிக்க நாட்டின் அரசியல் வரலாற்றில் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையை பராக் ஒபாமா பெற்றார். இந்நிலையில் இவர் திரைத்துறையின் முக்கிய விருதான எம்மி விருதை வென்றுள்ளார். அந்நாட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒபாமா எட்டு ஆண்டுகாலம் அமெரிக்காவை ஆட்சி புரிந்தார். அது மட்டுமின்றி இசை, விளையாட்டு போன்ற பல துறைகளில் தனது திறமையை காட்டினார் பராக் ஒபாமா.
மேலும் இவர் OUR GREAT NATIONAL PARK என்ற ஆவணத்தொடரில் இடம்பெற்ற காட்சிகளுக்கு பின்னணி விளக்கக் குரல் கொடுத்திருந்தார். இதற்காக தற்போது அவருக்கு திரை துறையின் மிக உயரிய விருதான EMMY AWARD வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விருதை வென்ற இரண்டாவது அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை பெறுகிறார் பராக் ஒபாமா. முன்னதாக டுவைட் ஐசனோவர் இந்த விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.