Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அருவி போல் பொழிந்த பாராங்கல்… 3 பேர் படுகாயம்… குற்றாலத்தில் பரபரப்பு..!!

குற்றாலத்தில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் மீது பாரங் கற்கள் விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி பழைய அருவி உள்ளிட்டவற்றில்நீர்வரத்து மிதமாக காணப்ட்டது.  

Image result for ஐந்தருவி கல் விழுந்து

இதையடுத்து ஐந்தருவியில் மட்டும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வந்த நிலையில், ஓடையில் உள்ள பாரங்கல் நீரால் அடித்து வரப்பட்டு குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தன. இதில் 3 பேர் தலையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதுடன் குளிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டது.

Categories

Tech |