பிரசவத்திற்கு பிறகு பரினா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் அருண் பிரசாத் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக வினுஷா நடித்து வருகிறார். மேலும், இந்த சீரியலில் வில்லியாக வென்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரினா.
சமீபத்தில், இவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக இவர் அறிவித்தார். இந்நிலையில், பிரசவத்திற்கு பிறகு இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.