மார்ச் 31ம் தேதி வரை நீதிமன்றத்திலும் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தியேட்டர், வணிக வளாகம், ஊர் திருவிழா, திருமண மண்டபம் இவை யாவும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால், தமிழக அரசு இம்மாதிரியான இடங்களுக்கு தடை விதித்தது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் தற்போது நீதிமன்றத்திலும் கொரோனா அச்சம் காரணமாக, புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, முக்கிய வழக்குகள் மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரக்கூடிய நாள்களில் விசாரிக்கப்படும். மார்ச் 31-ஆம் தேதி வரை ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு நீதிபதி 50 வழக்குகள் மட்டுமே விசாரிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்பு இல்லாத நபர்கள் நீதிமன்றத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.