Categories
உலக செய்திகள்

சுகாதார காப்பீட்டில் புதிய விதிகள்…. சுவிட்சர்லாந்தில் வெளியான அறிவிப்பு…!!!

சுவிட்சர்லாந்தில் இனிமேல் உளவியல் சிகிச்சையானது, அடிப்படை சுகாதார காப்பீட்டு படி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்விட்சர்லாந்தில் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து பயிற்சி அளிக்கப்பட்ட உளவியலாளர்கள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை சுவிஸ் அடிப்படை கட்டாய சுகாதார காப்பீட்டு படி திருப்பி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பெற மருத்துவர்களின் பரிந்துரை தேவை.

இதுமட்டுமல்லாமல் நிபந்தனைகள் சிலவற்றையும் பூர்த்தி செய்வது அவசியம். இந்த சேவைக்குரிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை. மருந்துச் சீட்டு ஒன்றில் 15 அமர்வுகளுக்கு தான் அனுமதி. 16-ஆவது அமர்வுக்கு பிறகு மற்றொரு  மருந்துச் சீட்டு தேவை. தற்போது அங்கீகாரம் செய்யப்பட்ட மனநிலை பயிற்சிகள் அல்லது மனநல மருத்துவர்களால் இந்த மருந்துசீட்டுகள் அளிக்கப்படவில்லை என்றால் அந்த உளவியல் சிகிச்சை திரும்ப செலுத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக சுகாதார மையம், உலக அளவில் மன நலம் பற்றிய அறிக்கையை தற்போது வெளியிட்டிருந்தது. அதில் கடந்த 2019 ஆம் வருடத்தில் ஏறக்குறைய ஒரு பில்லியன் மக்கள் மனநலப் பிரச்சனைகளுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மனநோயால் பாதிக்கப்பட்ட மக்களில் 70% நபர்கள் எந்தவித மனநல பாதுகாப்புமின்றி இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |