துளசியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்
சளி, ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில்,துளசி இலையை எடுத்துக்கொள்ளலாம்.
மூலிகைகளிலேயே சக்திவாய்ந்த மூலிகை என்று கூறப்படும் துளசி, பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து அழிக்கும் சக்தியை கொண்டது. மேலும் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை புண் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைகிறது. குறிப்பாக இருமலுக்கு மிக உகந்த மருந்து. மேலும் துளசி ஜீரண சக்தியை அதிகரிப்பதோடு சுவாச பிரச்சனைகளுக்கு நல்ல பலனளிக்கும்.நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்துவதிலும் மிக சிறப்பாக செயல்படக் கூடியது.