அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்து என்பது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில், வரும் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து ஆரம்பமாக இருக்கும் நிலையில், பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் மொத்தம் உள்ள 43 இருக்கைகளில் 25 இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர அனுமதிக்கப்படுவார்கள்.
இருவர் மட்டுமே அவரும் இருக்கைகளில் ஒருவர் மட்டும் தான் உட்கார வேண்டும். 3 பேர் அமரும் இருக்கைகளில் இருவர் மட்டுமே உட்கார வேண்டும். நடுவில் உள்ள இருக்கையில் உட்கார அனுமதி கிடையாது. மேலும் முக்கவசம் அணியவில்லை என்றால் பயணம் செய்ய அனுமதி கிடையாது. பேருந்து ஓட்டுனர், நடத்துனர் முகக்கவசம், கையுறை போன்றவற்றை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். இத்தகைய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.