சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவது நாளை முதல் கட்டாயமாகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் நாளை முதல் பாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் முறைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் இனி காத்திருக்க தேவையில்லை என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கூறியுள்ளது. காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவே சுங்கச்சாவடிகள் மின்னணுமயமாக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக்கை அமேசான் மற்றும் எஸ்பிஐ, எச்டிப்சி மற்றும் ஐசிஐசிஐ, கோடக் மஹேந்திரா, அக்சஸ் ஆகிய வங்கிகளில் கணக்கை துவக்கி இணைய வழியாக பணத்தை செலுத்த முடியும்.