நேற்று நடைபெற்ற கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ,ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றது. வெற்றி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியபோது, இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக ஆடியதால் , இந்த வெற்றி கிடைத்தது என்றார். சீனியர் வீரர்களை போலவே ,ஜூனியர் வீரர்களும் நன்றாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் ,அடுத்த ஆட்டத்திலும் திட்டமிட்டு விளையாடுவோம் என்று கூறினார். தோல்வி அடைந்ததை பற்றி ,கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் கூறும்போது, இந்தப் போட்டியில் எங்களுடைய பேட்டிங் மிக மோசமாக இருந்ததாக கூறினார். தொடக்கத்திலிருந்தே வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறியதால் தோல்வியை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். எனவே அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பதாக மோர்கன் கூறினார் .