Categories
அரசியல்

“தனி போக்குவரத்து” பெட்ரோல்… டீசல் காலம்லா போச்சு…. இனி இதுக்குதான் மவுசு…!!

எதிர்காலத்தில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே மவுசு இருக்குமென பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவி வருகிறது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நமது வாழ்வியல் முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல துறைகளில் ஒருபுறம் நஷ்டம் ஏற்பட்டாலும், மறுபுறம் நமது பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதனை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த வகையில்,

போக்குவரத்து துறையில் சிக்கனமாக செலவு செய்து கூட்ட நெரிசலை பொறுத்துக்கொண்டு போக்குவரத்தில் நெருக்கடியான சூழலில் பயன்படுத்திக் கொண்டிருந்த மக்கள் இனி வரக்கூடிய காலகட்டத்தில் தனிமையையே பெரிதாக விரும்புவர். அவரவருக்கென இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொண்டு அதிலே பயணம் மேற்கொள்ள,  அலுவலகம் செல்ல விரும்புவர்.

காரணம் கொரோனா நோய்த் தொற்றுக்கான அச்சம்தான். நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் உள்ள மக்கள் மட்டுமே பணம் இல்லாத ஒரே காரணத்திற்காக பொது பயணத்தை மேற்கொள்ளும் சூழ் நிலை ஏற்படுமே தவிர, இனி பொது பயணம் என்பதில் மிகுந்த சிக்கல் ஏற்படும். உதாரணமாக பேருந்துகளில் கூட்ட நெரிசல் உடன் பயணிகளை ஏற்றக்கூடாது பாதி பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் போக்குவரத்து துறைக்கு ஒரு வேளை நஷ்டம் வரலாம்.

அதிகப்படியான மக்கள் நோய்த்தொற்றை கண்டு பயந்து இதுபோன்ற தனி போக்குவரத்தை விரும்பினால், கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே போக்குவரத்து துறையிலும் அதிக மாற்றங்கள் ஏற்படும். அதேபோல் தனி போக்குவரத்தில் பொது மக்கள் விரும்பும் சூழ்நிலையில் டீசல் பெட்ரோல் உள்ளிட்ட முக்கியத் தேவை குறைந்து மின்சாரத்துடன் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்து அதற்கான மவுஸ் இனி வரக் கூடிய நாட்களில் அதிகரிக்கும்.

Categories

Tech |