Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 நாட்களில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்வு….!!

4 நாட்களில் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 2அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

3 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக பவானி சாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணை 105 அடி உயரம் , 8 TMC கொள்ளளவு கொண்டுள்ளது .இந்த அணையால்  ஈரோடு, திருப்பூர், கரூர் போன்ற மாவட்டங்களின்  2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அணையின் சுற்றியுள்ள  பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரிப்பகுதிகளில்தொடர்ந்து  பெய்து வரும் மழையால், அணையின்  நீர்வரத்து கணிசமான் அளவு அதிகரித்துள்ளது.

Image result for பவானிசாகர் அணை

முக்கியமாக  கடந்த 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் 2 அடிக்கு உயர்ந்துள்ளது. நேற்று காலையில்  அணையின்  நீர்வரத்து 1, 872 கனஅடியாக இருந்தது. அதே போல இன்று காலையின்   நிலவரப்படி 2 ஆயிரத்து 703 கனஅடியாக அதிகரித்தது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 57.45 அடியாகவும் ,  நீர் இருப்பு 6 . 4 TMC_ஆகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால்  பாசனப்பகுதியில் உள்ள  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Categories

Tech |