சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினை 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ஹாட்ஸ்டார் OTT யில் ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அபிராமி வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டாஸ்க்கின்போது அபிராமிக்கும், தாமரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அபிராமி தாமரையை பார்த்து நீங்கள் நடிக்கிறீர்கள் என்று கூறியுள்ளார். இதனால் கடுப்பான தாமரை மூஞ்சியை உடைத்து விடுவேன் என்று கூறியதுடன் டாஸ்க் என்றப் பெயரில் பாலா பின்னாலேயே சென்று கொண்டிருக்கிறது என கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அபிராமி வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.