Categories
கிரிக்கெட் விளையாட்டு

BBL 2022 :பிரபல கிரிக்கெட் வீரர் …. மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா பாதிப்பு ….!!!

பிக் பேஷ் டி20  லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக  கிளென் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

11-வது சீசன் பிக் பேஷ்  டி20 லீக் போட்டி ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு  நெறிமுறைகளைப் பின்பற்றி பலத்த பாதுகாப்புடன் இப்போட்டி நடைபெற்று வருகிறது. ஆனால் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மேலும் அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் பிரிஸ்பேன் ஹீட்  அணியை சேர்ந்த வீரர்களுக்கும் நேற்று கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |