பிக் பேஷ் டி20 லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ரெனிகேட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிக் பேஷ் டி20 லீக் போட்டியில் நேற்று நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் – மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்டார்ஸ் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ட்ராவிஸ் டீன் 32 ரன்னும்,கார்ட்ரைட் 41 ரன்னும் குவித்தனர் .
ரெனிகேட்ஸ் அணி தரப்பில் டாப்லி, மேடின்சன், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலாவிக்கெட் வீழ்த்தினர் . இதன்பிறகு 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி களம் இறங்கியது. இதில் அதிரடியாக விளையாடிய ஆரோன் ஃபிஞ்ச் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியாக 18 ஓவரிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அணி அபார வெற்றி பெற்றது.