Categories
மாநில செய்திகள்

BC, MBC மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2013-2014ஆம் கல்வியாண்டு முதல் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதை ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. அதன்படி முழுநேர முனைவர் பட்டப் படிப்பிற்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 2.50 லட்சம் ரூபாயாக  உயர்த்தியும், மாணவர்களின் எண்ணிக்கை 1200 லிருந்து 1600 ஆக உயர்த்தியும், ஒரு மாணவருக்கான ஊக்கத் தொகையினை 50 ஆயிரம் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தியும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரி வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயரவும், இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் பெற்றோரின் ஆண்டு வருமான வரி வரம்பை 2 லட்சத்தில் இருந்து 2.50 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |