நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது 4,500 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
வயது: BC, MBC-30, SC/ST- 32. இந்த நிலையில் இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அரியலூர், திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெறுவதாக அந்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இந்த வாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.