தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், IIM, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டயப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை BC, MBC, SC, ST மாணவர்கள் கல்வி உதவித்தொகையை பெற நவம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் 2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த அறிய வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை நேரில் அணுகி அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமாக விண்ணப்பம் அனுப்ப கோரி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது