இந்தியா கிரிக்கெட் வீரர் ப்ரித்விஷா ஊக்கமருந்து பயன்படுத்தியதால் பிசிசிஐ விளையாட தடை விதித்துள்ளது.
இந்தியாவில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இளம் வீரரான ப்ரித்விஷா மிகச்சிறந்த ஆட்டக்காரர் ஆவார் . இவர் இந்திய அணிக்காகவும் விளையாடியவர் ஆவார். இந்நிலையில், இவர் ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தினால் இந்திய கிரிக்கெட் வாரியம் இவர் மீது சோதனை நடத்த உத்தரவிட்டது. சோதனையின் முடிவில் இந்தியாவின் இளம் வீரரான ப்ரித்விஷா ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது .
இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் ப்ரித்விஷாவுக்கு 8 மாதம் விளையாட தடை விதித்துள்ளது. இந்நிகழ்வு, அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும். தற்போது , இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இனிமேல் அவர் இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என அச்சம் எழுந்துள்ளது . இதனால், இவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர் .