பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவில் தலைவராக இருந்த அஜித் சிங்கின் பதவி காலம் முடிவு பெற்றதால் புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்.
பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவில் , இதற்கு முன்பாக ராஜஸ்தான் மாநில முன்னாள் டி.ஜி.பி போலீசார் அஜித் சிங் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருடைய பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் பிசிசிஐ -யின் ஊழல் தடுப்பு பிரிவு காலியாக இருந்தது. தற்போது அந்தப் பதவிக்கு புதிய தலைவராக குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி. போலீசாரான ஷபிர் உசேன் ஷேகதாம் கந்த்வாவாலா நியமிக்கப்பட்டார்.
இதுபற்றி அவர் கூறும்போது, உலகிலேயே தலை சிறந்த கிரிக்கெட் அமைப்பான ,இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ,ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றுவதை நான் பெருமையாக கருதுகிறேன். எனக்கு பாதுகாப்பு பணியில் அனுபவம் இருப்பதால், இந்த புதிய பதவிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனால் என்னுடைய பணியை சிறப்பாக செய்வேன் என்று நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.