மும்பையில் நாளை நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 பேர் தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளன. இந்தப் போட்டிகளைக் காண மைதானங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள் கூடுவார்கள்.
எனவே வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதால் இந்தப் போட்டிகளுக்குத் தடை விதிக்க கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் குறித்து நாளை மறுநாள் ஐபிஎல் நிர்வாகிகள் அவசர கூட்டம் நடைபெற உள்ளது. ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.
மும்பையில் நாளை நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த அரசு அறிவுறுத்திய நிலையில் ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நாளை ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுவார்களா? என்பது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. இதனிடையே டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.