கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பி.சி.சி.ஐ.வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் முன்னாள் வீரர்கள் முதல் தற்போது விளையாடி வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வரை இடம்பெற்று, பொதுமக்களை முகக்கவசம் அணிவது தொடர்பாக வலியுறுத்துகின்றனர்.
மேலும், #TeamMaskForce என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதில் இணைந்திடுங்கள் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்தனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு பிரதமர் மோடி, முகக்கவசம் அணிவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார். மேலும், விளையாட்டு வீரர்களை இந்த விழிப்புணர்வு வீடியோவிற்கு நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோவில் தோனி இடம்பெறாதது பெரும் வருத்தத்தை தருவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல, இந்த வீடியோவில் அவர் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்தும் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. தோனி இடம் பெறாதது குறித்து பல்வேறு கோணங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.