பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகின்ற 29 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உலக கோப்பை டி20 போட்டி மற்றும் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டி குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
வருகின்ற 29ஆம் தேதி பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று சூழலில் , இனி வரவிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதைப் பற்றி ஆலோசிக்கப்படுவதால்,உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு சுற்றறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். அடுத்த ஜூன் மாதம் 1ஆம் தேதி ஐசிசி-யுடன் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில், உலக கோப்பை போட்டி நடத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் , பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது . அதன்படி இந்தியாவில் உலக கோப்பை டி20 போட்டி வருகின்ற அக்டோபர்- நவம்பர் மாதத்தில், நடத்துவது பற்றி முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
இந்த உலகக் கோப்பை டி20 போட்டி இந்தியாவில் நடத்த வேண்டும், என்று பிசிசிஐ உறுதியாக இருக்கிறது. ஒருவேளை இந்தியாவில் போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் , மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றுவது, தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும். ஆனால் இந்தியாவில் ஜூன் , ஜூலை மாதங்களில் கொரோனா நிலையை ஆராய்ந்து, அதற்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை எப்போது நடத்தலாம் என்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14 ம் தேதிவரை நடக்க உள்ளது .எனவே இந்த தேதியில் ஐபில் போட்டி நடத்துவதற்கு வசதியாக இருக்கும் என்பதால், தேதியை மாற்றி வைக்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ,பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒருவேளை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தேதி மாற்றத்திற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதித்தால், மீதமுள்ள ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும். ஏனெனில் இந்த ஐபிஎல் போட்டி மூலமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு, அதிகளவு வருவாய் கிடைக்கும். இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டி இங்கிலாந்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக கூறுகின்றன.