Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு ….! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ ,தலைவருமான கங்குலி கடந்த 28-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கொல்கத்தாவிலுள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .அதோடு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு  டெல்டா பிளஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது .அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டும் இருந்ததாகவும் ,அடுத்த 14 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .இதனால் 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர் பணிகளை தொடர்வார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |