சர்வதேச அளவிலான டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை (கிரேட் ஏ+, ஏ, பி, சி பிரிவுகளில்) பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் கிரேட் ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ரூபாய் 7 கோடியும், ஏ, பி மற்றும் சி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ரூபாய் ஐந்து, மூன்று மற்றும் ஒரு கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ‘ஏ+ ‘பிரிவில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் நீடிக்கின்றனர். அடுத்ததாக ‘ஏ ‘ பிரிவில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் முகமது ஷமி ஆகியோர் நீடிக்கின்றனர்.
இதில் கடந்த ஆண்டு ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த இஷாந்த் சர்மா, ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் இந்த ஆண்டு ‘பி ‘ பிரிவில் இடம் பெற்றுள்ளனர். மேலும் ‘சி’பிரிவில் இருந்த அக்ஸர் பட்டேல், ஸ்ரேயாஸ் அய்யர் முகமது சிராஜ் ஆகியோர் ‘பி’ பிரிவிற்கு முன்னேறியுள்ளனர்.
ஆனால் கடந்த ஆண்டு ‘ஏ ‘பிரிவில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ளார். அதேபோல் கடந்த ஆண்டு ‘பி’ பிரிவில் இருந்த விருத்திமான் இந்த ஆண்டு ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ளார். மேலும் உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோரும் ‘சி’ பிரிவில்இடம்பிடித்துள்ளார்.