பிசிசிஐ-யின் மத்திய ஆண்டு ஒப்பந்தத்தில் ,முன்னிலையில் இருந்த புவனேஸ்வர் குமார் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 2020 முதல் 2021 செப்டம்பர் மாதம் வரை வெளியிட்டது. இதன்படி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ,பும்ரா ,ரோகித்சர்மா ஆகிய 3 வீரர்கள் ‘ஏ ‘ப்ளஸ் பிரிவில் இடம்பெற்றன. அடுத்து ஹர்திக் பாண்டியா கடந்து 2019- 2020 இல் ‘பி’ பிரிவில் இருந்த, இவர் தற்போது ‘ஏ’ பிரிவிற்கு முன்னேறியுள்ளார். ஆனால் ‘ஏ’ பிரிவில் இருந்த ,பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், தற்போது ‘பி’ பிரிவில் பின்னுக்குத் தள்ளப்பட்டார் .இவ்வாறு ‘ஏ ‘ ப்ளஸ் பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு 7 கோடி ரூபாயும்,’ஏ ‘பிரிவில், இடம்பெற்றுள்ள வீரர்கள் 5 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது .
அதோடு ‘ பி’ மற்றும்’ சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு 3 கோடி மற்றும் 1 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. எனவே தற்போது வெளியிட்டுள்ள மத்திய ஒப்பந்தத்தின் படி,அஷ்வின், ஜடேஜா, புஜாரா, ரகானே, தவான், கேஎல் ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகிய வீரர்கள் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்தனர் .‘’பி’ பிரிவில் சகா, உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால் ஆகிய வீரர்கள் இடம் பிடித்தனர் . இதை தொடர்ந்து குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ஷுப்மான் கில், ஹனுமா விஹாரி, ஷ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.