Categories
தேசிய செய்திகள்

கள்ளஉறவுக்கு தடையாக இருந்த கணவன்… ” சாகும்வரை சுத்தியலால் அடித்து”… கொடூரமாக கொலை செய்த மனைவி…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கணவனைக் கொலை செய்ய கூகுளில் தேடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கெதிப்பூர் என்ற பகுதியில் வசித்துவரும் அமீர் என்பவரின் மனைவி தபஸ். அமீருக்கு வேலை மாற்றம் காரணமாக மராட்டிய மாநிலத்திற்கு சென்று விட்டார். இதனால் தபஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த இம்ரான் என்ற வாலிபருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளதொடர்பாக மாறியுள்ளது. கணவன் வெளியூருக்குச் என்ற காரணத்தினால் இவர்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மராட்டிய மாநிலத்தில் இருந்த கணவனுக்கு வேலை பறிபோனது. இதையடுத்து மனைவியை பார்க்க மத்திய பிரதேசத்திற்கு வந்துள்ளார். ஊருக்கு வந்த பிறகு மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதை தெரிந்த கணவர் மனைவி மற்றும் அவரது நண்பரை கண்டித்துள்ளார். பின்னர் தனது கணவனை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்த அந்தப் பெண் கூகுளில் தேடி உள்ளார்.

இதையடுத்து காதலனோடு இணைந்து கணவனின் ஆஸ்துமா மருந்தில் விஷம் கலந்து அவருக்கு கொடுத்து, துப்பட்டாவில் அமீரின் கை கால்களை கட்டி அவர் சாகும்வரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் கணவன் திடீரென்று இறந்து விட்டான் என்று நாடகமாடி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் அனுப்பி உள்ளனர். தகவலின்பேரில் மனைவியை விசாரணை செய்த போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். பிறகு மனைவி தபஸ் மற்றும் காதலன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |