Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு ஸ்பெஷலாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை எதிர்கொள்வதற்காக ஒரு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 38 சதவீதம் வரை அகவிலைப்படி பெற்று வருகிறார்கள். மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்கு பிறகு மாநில அரசுகளும் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது ஒடிசா மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது அகவிலைப்படியானது 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |