Categories
மாநில செய்திகள்

BE ALERT: சென்னையில் நாளை காலை 6 மணி முதல் ஒருநாள்…. திடீர் அறிவிப்பு…!!!

நெய்வேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நாளை காலை 6 மணி முதல் 25ஆம் தேதி காலை 10 மணிவரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்னையில் நாளை, கொட்டிவாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், பெருங்குடி உள்பட 8 பகுதிகளுக்கு குடிநீர் விநியோகமானது தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் முன் எச்சரிக்கையாக குடி நீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் லாரிகள் மூலம் அவசரத் தேவைகளுக்கு குடிநீரை பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு பகுதி 9 மயிலாப்பூர், மந்தைவெளி பொறியாளர் செல்போன் எண் 81449-30909, பகுதி 13 அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர் பொறியாளர் செல்போன் எண் 81449-30913, பகுதி 14 கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி பொறியாளர் செல்போன் எண் 81449-30914, பகுதி 15 ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பொறியாளர் செல்போன் எண் 81449-30915  போன்ற எண்களை தொடர்புகொண்டு பயனடையலாம் என சென்னை குடிநீர் வாரியம் தகவலை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |