அரபிக்கடலில் மேலடுக்கில் சுழற்சி உருவாகியுள்ளதால் பொதுமக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பலத்த மழையை கொடுத்துள்ளது. மேலும் நேற்று பாம்பன் அருகே கரையை கடந்த நிலையில் தற்போது வரை அதிக மழை பெய்துள்ளது. இதையடுத்து வரும் டிசம்பர் 7ஆம் தேதி அடுத்ததாக புதிய புயல் உருவாக உள்ளதாகவும், அது இரட்டை புயலாய் மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அரபிக்கடலில் மேலடுக்கில் சுழற்சி உருவாகி உள்ளதால் மீனவர்களுக்கும், பொது மக்களுக்கும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் குமரி, அரபிக் கடலில் கொந்தளிப்பு ஏற்படும். இதனால் குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.