ஆந்திர மாநிலத்தில் கள்ள உறவுக்கு 3 வயது குழந்தையை தடையாக இருந்த காரணத்தினால் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு சித்துஸ்ரீ என்ற மூன்று வயது மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மனைவி வரலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. திடீரென்று வரலட்சுமி தனது கணவன் ரமேஷுக்கு போன் செய்து மூன்று வயது குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதை யாரிடமும் கூறாமல் புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மனைவி வரலட்சுமியை விசாரணை செய்தபோது கள்ள உறவுக்கு மகள் தடையாக இருந்த காரணத்தினால் கொலை செய்து விட்டதாக அவர் கூறியுள்ளார். இது அப்பகுதியில் இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் காவல்துறையினர் வரலட்சுமி மற்றும் ஜெகதீஷ் இருவரையும் கைது செய்தனர்.