Categories
Tech டெக்னாலஜி

மக்களே! உஷார்…. ஆன்லைன் ஷாப்பிங்கில் கவனம்…. இந்த சிறிய தவறால் வங்கியில் இருக்கும் மொத்த பணமும் அபேஸ்….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆன்லைன் ஷாப்பிங்கை பெரும்பாலும் விரும்புகின்றனர். இதில் குறிப்பாக பண்டிகை நாட்களில் ஆன்லைன் ஷாப்பிங் அதிக அளவில் நடைபெறுகிறது. இதை சில மோசடி கும்பல்கள் பயன்படுத்திக் கொண்டு போலியான செயலிகளை உருவாக்கி பொருட்களை விற்பனை செய்கிறோம் என்று கூறி பொதுமக்களிடம் பணத்தை பறிக்கின்றனர். எனவே நீங்கள் ஒரு செயலியில் பொருட்களை வாங்கும் போது நீங்கள் வாங்கும் செயலியில் உண்மைதானா என்பது ஒரு முறைக்கு இருமுறை சோதனை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு பெரும்பாலும் பொருட்களுக்கு கேஷ் ஆன் டெலிவரி செய்வது தான் மிகவும் நல்லது.

ஏனெனில் நீங்கள் ஆர்டர் செய்த செயலி ஒருவேளை போலியாக இருக்கும் பட்சத்தில், வங்கியில் பொருட்களுக்கான பணத்தை செலுத்தும்போது உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுவார்கள். டெல்லி காவல்துறையினர் போலியான செயலிகளை உருவாக்கி மக்களை ஏமாற்றியவர்களை கைது செய்தனர். இந்நிலையில் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளத்தின் பெயரில் கூட சிலர் போலியான செயலிகளை உருவாக்கி ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார்கள். மேலும் சிலர் போலியான லிங்குகளை செல்போனுக்கு அனுப்பி அதன் மூலமும் ஏமாற்று வேலையில் ஈடுபடுவதால் பொதுமக்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |