Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கவனமா இருங்க…”இந்த ரத்த வகை உள்ளவர்களுக்கு”… மாரடைப்பு அதிகம் ஏற்படுதா…ஆய்வில் வெளியான தகவல்..!!

A, B, AB ஆகிய ரத்த வகை உள்ளவர்களுக்கு, O ரத்த வகையை உள்ளவர்களைக் காட்டிலும் 9 சதவீதம் மாரடைப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தகவல் தெரியவந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. குறிப்பாக காலை வேளையில் தான் அதிக அளவில் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் உள்ள வில்ப்ராண்ட் காரணி அதிக அளவில் இருப்பதால் A, B, AB ஆகிய ரத்த வகை உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். வில்பிரான்ட் காரணி என்பது இரத்த உறைவு புரதமாகும்.

A வகை இரத்தக் குழு உள்ளவர்களுக்கு அதிக கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மாரடைப்பு உள்ளவர்களுக்கு பெரிய ஆபத்தாக உள்ளது.  O ரத்த குழுக்கள் உள்ளவர்களுக்கு கேலக்டின் -3 அதிக அளவில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கேலக்டின் -3 வீக்கம் மற்றும் ரத்த நோயாளிகளுக்கு மோசமான விளைவை கொடுக்கின்றது. பல்கலைக்கழக மருத்துவ மைய மாணவர் முன்னணி ஆசிரியருமான டிஸ்ஸா கோல் கூறுகையில் A, B, AB ரத்த குழுக்கள் உள்ளவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து 9 சதவீதம் அதிகம் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன

Categories

Tech |