Categories
Uncategorized

“சளி, இருமல் அதிகமா இருக்கா”…? அப்ப இந்த செடியை பயன்படுத்துங்க… எப்படி எடுப்பது…. யாருக்கெல்லாம் நன்மை..!!

இருமல், சளி, இறைப்பு தொல்லையை போக்கும் உத்தாமணி செடியை பற்றி அதன் நன்மைகளை குறித்து இதில் பார்ப்போம் .

மாத்திரைகள் இல்லாத காலத்தில் மூலிகை கொண்டு பல நோய்களுக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. அப்படி சளி, இருமல், இரைப்புக்கு  அதிகம் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளில் முக்கியமானது உத்தாமணி. வேலிப்பருத்தி என்ற பெயர்களால் அழைக்கப்படும். இந்த  செடி பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது.

சளி, கோழை பிரச்சனைகளுக்கு:

குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, கோழை பிரச்சினைகள் இருந்தால் உடலில் இருந்து முழுவதும் சளியை வெளியேற்றுவதன் மூலம் இந்த உபாதையை குறையலாம். உத்தாமணி இலையை சுத்தம் செய்து லேசாக நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து ,கரு மிளகை சேர்த்து அதனை நன்றாக ஊறவிட்டு உலர்த்த வேண்டும். இது போல் 5 முதல் 7 முறை யாவது மிளகில் இலைச்சாறு விட்டு காயவைத்துப் பொடியாக்கவும். நன்றாக பொடியானதும், மெல்லிய துணியில் போட்டு சலித்து வைக்க வேண்டும்.குழந்தைகளுக்கு சளி உபாதை வரும்போது அவர்கள் வயதிற்கேற்ப 100 முதல் 200 மில்லி அளவு கொடுத்து வந்தால் சளித்தொல்லை நீங்கும்.

நெஞ்சு சளி அதிகமாக இருந்தால்:

குழந்தைகளுக்கு எப்போதும் நெஞ்சு சளி அதிகமாக இருக்கும் போது சிரமப்படுவார்கள்.தூங்கும் போது இன்னும் சிரமப்படுவார்கள்.  உத்தாமணி இலைச்சாறு 5 முதல் 10 மில்லி லிட்டர் குடிக்க செய்தால்  சளி வாந்தியாக வெளியேறும். மீதம்  இருப்பவை மலத்தில் வெளியேறும். நுரையீரலுக்கு அருமருந்தாக இருப்பதோடு, அதை சுத்தம் செய்யவும் கூடும்.

ஆஸ்துமா தீவிரத்தை தடுக்க:

ஆஸ்துமா நோய் கொண்டிருப்பவர்களுக்கு மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும். குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் இது தீவிரமாக இருக்கும். இந்த இலை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் ஆஸ்துமா தீவிரமாகாமல்  தடுக்கலாம். ஆஸ்துமா எல்லா காலங்களிலும் பெரும் உபாதையை தந்தால், உத்தாமணி பொடி நாட்டு மருந்து கடையில் வாங்கி தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

குடல் புழுக்கள்

வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்ற ஆறுமாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது வழக்கம்.  அவருக்கு பதிலாக மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் உத்தாமணி இலையை சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரோடு வசம்பை உரசி காலையும் மாலையும் குடித்து வந்தால் புழுக்கள் வெளியேறும். பெரியவர்களும் இதை குடிக்கலாம்.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உத்தாமணி சாரை பக்குவமான  முறையில் எடுத்து வந்தால் ரத்த அழுத்தம் சீராகும். உத்தாமணி இலையை சுத்தம் செய்து ஒரு டம்ளர் பசும்பாலில் அதனை சேர்த்துக் கொதிக்க வைத்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர நல்ல பலன்கிடைக்கும்.

மூட்டுவலி வீக்கம்

உத்தாமணி இலையை எடுத்து உரலில் இடித்து நீர் சேர்க்காமல் அரைத்து துணியில் முடிச்சு போடவும். இதனை கனமான தோசைக்கல் மீது வைத்து சூடாகி மூட்டு வீக்கம் இருக்கும் பகுதியில் ரத்த கட்டி இருக்கும் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும். இவ்வாறு மூட்டு வலி, இடுப்பு வலி ஒத்தடம் கொடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Categories

Tech |