தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை மீறும் பட்சத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்க அனுமது அளித்தது. இதையடுத்து மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
அரசின் முடிவுக்கு கண்டனம்:
மேலும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவும் நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்கு:
இந்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் , டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா? மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக சென்று டெலிவரி செய்ய முடியுமா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி கேள்வி எழுப்பியுள்ளது.
அரசு வாதம்:
கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளை திறக்கப்படுகிற.து மொத்த விற்பனை செய்யப்படமாட்டாது, தனி நபர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும். முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று அரசு சார்பில் வாதிடப்பட்டது.
வழக்கு தள்ளுபடி:
மேலும் மதுக்கடைகளை திறப்பதற்கு பதில் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியுமா? மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பின்னர் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் சொன்ன கருத்துக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.
நிபந்தனைகள்:
தனி மனித இடைவெளியை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் டிஜிபி உத்தர விட்டது போல முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
மதுபானக் கடைகளின் பார்களை திறக்கக் கூடாது.
மூன்று நாளைக்கு ஒருமுறை ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே விற்க வேண்டும்.
மதுவங்குவோரின் பெயர், முகவரி, ஆதார் என்னுடன் ரசீது தரவேண்டும்.
ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் நடைமுறை கொண்டு வர வேண்டும்.
ஆன்லைன் மூலம் வாங்குவோருக்கு இரண்டு மது பாட்டில் வழங்கலாம்.
நீதிமன்றம் எச்சரிக்கை:
டாஸ்மார்க் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட வில்லை என்றாலும் அது எப்படி செயல்படுகின்றது என நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும். நீதிமன்ற உத்தரவு மீறப்படுமானால் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட நேரிடும் என்ற எச்சரிக்கையும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றார்.