காங்கிரஸ் தோல்வி குறித்து காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு நாம் நமது பயங்களில் இருந்து வெளிவர வேண்டும் எனக் ட்விட் செய்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது தொடர்ந்து இரண்டாவது முறை ஒரு இடத்தில் வெற்றிபெறாமல் தோல்வியடைந்துள்ளது. இது கட்சியின் தொண்டர்களை கவலையடையச் செய்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது “டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்காக எந்த ஒரு மாயாஜாலத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் கட்சி மறுபடியும் அழிக்கப்பட்டுள்ளது. நாம் சரியான பாதையில் உள்ளோமா எனக் கேட்டால் இல்லை என்றே கூறலாம். இப்போது இருந்தே நாம் பணியினை தொடங்கிவிட வேண்டும். இப்போது தொடங்கவில்லை என்றால் இனி எப்போதும் செய்ய முடியாது. அடியிலிருந்து உயரம் வரை பல செயல்களில் நாம் மாற்றம் செய்ய வேண்டும். “நீ காண விரும்பும் மாற்றமாக நீயே மாறிவிடு” எனும் மகாத்மாவின் வார்த்தைகளுக்கு எடுத்துக்காட்டாக நாம் இருக்க வேண்டும். நாமே நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி நமது பயன்களில் இருந்து நாம்தான் வெளியில் வரவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.