இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், செல்லங்குப்பத்தைச் சேர்ந்த 25 வயதான அரவிந்தன் கடலூர் அரசு கல்லூரியில் படித்தபோது உடன் படித்த விழுப்புரத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அரவிந்தனின் சகோதரிக்கு திருமணம் என்றும், அதனால் அவரை வருமாறு அழைத்துள்ளார். அனைவரும் மண்டபத்தில் இருந்த போது காதலியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
தற்போது திருமணம் செய்யுமாறு கேட்டதற்கு திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த புகாரின் பேரில் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து அரவிந்தனை கைது செய்தனர்.