தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனாவின் ஹாட்ஸ்பாட் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் தொடங்கினால் வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
ஏப்ரல் 20ம் தேதிக்குப் பின்னர் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து கொரோனா பாதித்த மாவட்டங்களை பல்வேறு மண்டலங்களாக வகைப்படுத்தி மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் 170 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரே மாவட்டத்தில் 15 க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் அந்த மாவட்டம் ஹாட்ஸ்பாட் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை 22 மாவட்டங்களில் மத்திய அரசின் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக உள்ளன. அதில், சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை உள்ளிட்ட 22 மாவட்டங்கள் அடங்கும். இந்த மாவட்டத்திங்களில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கை மிகவும் தீவிரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.