மொபைலில் ஒருவரின் தொடர்பு எண்ணை சேமிக்கும்போது இந்த முறையை இனி பின்பற்றுங்கள்.
தற்போதைய காலகட்டத்தில் செல்போன் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. நண்பர்கள் உறவினர்களை நேரில் பார்க்கும் தருணம் குறைந்து தற்போது செல்போனில் அதிகநேரம் பேசும் நேரம் உருவாகிவிட்டது. நாம் நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் எண்ணையும் நமது போனில் பதிந்து வைத்துக் கொள்வோம். ஆனால் நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை. ஏனெனில் தொடர்பு எண்ணை நமது போனில் அல்லது சிம் கார்டில் பதிந்து வைப்போம்.
இரண்டு முறையும் பின்பற்றுவது உண்டு. இந்த இரண்டு முறை தவறானது. ஒரு வேளை நமது மொபைல் போன் அல்லது சிம்கார்டு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதில் எண்கள் எல்லாம் அழிந்துவிடும். அதற்கு பின் அதை திரும்பப் பெறுவது என்பது மிகவும் கடினமாகிவிடும். அதற்கு மாறாக ஒரு முறை நாம் நமது செல்போனில் உள்ள எண்ணை ஜிமெயிலில் மாற்றி வைத்து விட்டால் போதும், எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் நாம் ஜிமெயிலில் உள்ள எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே ஜிமெயில் பதிவு செய்து கொள்ளுங்கள்.