ஆன்லைன் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க கீழ்க்கண்ட நான்கு செயல்முறைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில், ஆன்லைன் கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளதாகவும், கீழ்கண்ட இந்த நான்கு முறைகள் மூலமாக நடைபெற்று இருப்பதால் இவற்றிலிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய, மாநில அரசுகள் அறிவுரை எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடப்பதால், பின்வரும் வழிகளில் எச்சரிக்கையாக இருக்கும்படி அரசு சார்பில் தெரிவிக்கப்படுவது என்னெவெனில்,
- வங்கி கணக்கு பாஸ்வேர்டை யாருக்கும் சொல்ல வேண்டாம்.
- மொபைலுக்கு வரும் லிங்கை ஓபன் செய்ய வேண்டாம்.
- பிறந்த தேதி, முகவரி, வங்கி கணக்குக்கடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை சமூக ஊடங்களில் வெளியிட வேண்டாம். ஏற்கனவே வெளியிட்டிருந்தால் அவை அனைத்தையும் மாற்றி விடுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.