Categories
மாநில செய்திகள்

இதுலாம் தப்புங்க…! அ.தி.மு.க. அமைதியா இருக்கு…. குருமூர்த்திக்கு திமுக கண்டனம் …!!

குருமூர்த்தியின் அவதூறான பேச்சை அதிமுகவினர் ஒப்புக் கொள்கிறார்கள் என்று திமுக சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

துக்ளக் இதழின் 51வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட, அந்த இதழை நடத்தும் பொறுப்பில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகள் நியமனம் குறித்துப் பேசியதை கண்டித்து திமுக சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நேற்று முன்தினம் சென்னையில் துக்ளக் இதழின் 51வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகளின் நியமனத்தையே கேள்விக்குரிய ஒன்றாக சித்தரித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்கள் ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் காலைப்பிடித்து தான் நீதிபதி பதிவிகளை பெற்றுள்ளார்கள் என்று குருமூர்த்தி பேசியிருப்பது, இந்திய நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் கண்டனத்துக்குரிய பேச்சாகும். உச்ச நீதிமன்றத்திற்கும்,உயர் நீதி மன்றங்களுக்கும் அரசமைப்புச் சட்டமே தகுதியை நிர்ணயிக்கிறது. இதன் அடிப்படையில் தான் நீதிபதிகள் நிர்ணயிக்க படுகிறார்கள்.பாஜகவின் தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்ச்சியில்,அதிமுக கூட்டுக்கொள்ளை நடத்திக் நடத்திக் கொண்டிருக்கிறது என்று குருமூர்த்தி பேசியிருக்கிறார்.

ஆனால் அதை அதிமுக அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. திமுகவை எதிர்ப்பதற்காக சசிகலாவை ஆதரிப்போம் என்று கூறி நெருப்பை அணைக்க சாக்கடையை அள்ளித் தெளிப்போம் என்று சசிகலாவை சாக்கடையுடன் ஒப்பிட்டு பேசிய குருமூர்த்தியின் அவதூறான பேச்சுகளை அதிமுக இதுவரை கண்டிக்காது இருப்பதை பார்த்தாள் , அக்காட்சியின் கூட்டு கொள்ளையையும், முன்னாள் பொதுச் செயலாளரையும் பற்றி குருமூர்த்தி பேசியதை அதிமுகவினர் ஒப்புக்கொள்கிறார்கள் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |