Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பகிரங்க சவால் விட்டேன்… அதிமுகவில் இருந்து பதில் வரல… மாஸ் காட்டிய ராசா ..!!

நான் தமிழக முதல்வருக்கு விடுத்த பகிரங்க சவாலுக்கு எந்த பதிலும் இல்லை என திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார். 

நேற்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா,கடந்த 3ஆம் தேதி முதலமைச்சர் எந்த முகாந்திரமும் இல்லாமல், 2ஜி வழக்கு குறித்து நீண்ட நேரம் பெரிய மெகா ஊழல் நடந்தது போலவும், மாநிலத்தின் பட்ஜெட்டுக்கு இணையான பெரிய தொகையை ஊழலாக திமுக செய்து விட்டது, ராஜா செய்து விட்டத்தை போலவும் ஒரு முதலமைச்சரே கீழமை நீதிமன்றத்தில், 2ஜி நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்து இருக்கின்றது , என்ன சாட்சியம் வந்து இருக்கின்றது என முதலமைச்சருக்கு அறிவுரை சொலவதற்கு உளவுத்துறை, சட்டத்துறை இருந்தும்,

வேண்டுமென்றே தன்னுடைய தகுதியை மறந்து, ஒரு படிக்காதவரை போல, அரசியல் காரணங்களுக்காக 2ஜி வழக்கு குறித்து மிக மோசமாக பேசியதன் விளைவாக நான் அன்று மாலையே 2ஜி வழக்கில் என்ன நடந்தது ? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை நான் எடுத்து சொல்லி, முதல்வருக்கு விளக்கம் தேவைப்பட்டால், நான் கோட்டைக்கு வருகின்றேன், உங்களின் அமைச்சரவையை கூட்டுங்கள் ஒரு பக்கம் அமரட்டும், இன்னொரு பக்கம் உங்களுக்கு உதவியாக இருக்கின்ற மத்திய அரசின் அட்டானி ஜெனரல்லே வரட்டும், உங்களின் அட்வகேட் ஜெனரல் வரட்டும் நான் தனி ஆளாக வந்து 2ஜி வழக்கு, ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு குறித்து விவாதிக்கலாம் என பகிரங்க சவால் விடுத்தது இருந்தேன்.

இன்று வரை முதல்வரிடம் இருந்து அதிகாரப்பூர்வமான எந்த பதிலும் இல்லை. என்னை அழைக்கவும் இல்லை. ஆனால் வெவ்வேறு ஆட்கள் மூலமாக, ஊடகங்கள் மூலமாக, அதிமுகவின் நிர்வாகிகள் மூலமாக என்னையும், திமுகவையும் விமர்சித்து, கொடும்பாவியை எரித்தும், ஜெயலலிதா பற்றி எந்த குற்றச்சாட்டும் உச்சநீதிமன்றத்தில் இல்லை என்றும் தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டு வருகின்றார்கள். எனவே எது உண்மை ? எது பொய் என்பதை ? உரிய ஆதாரத்தோடு, உச்சநீதிமன்ற தீர்ப்பில் என்ன சொல்லபட்டு இருக்கிறது ? உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்ந்து இந்த தீர்ப்ப்பை வழங்கிய போது என்னவெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள் ?

என்பதை விளக்குவதற்க்காக, முதல்வர் அழைக்காவிட்டாலும், நான் தமிழக மக்களுக்கு, ஜனநாயகத்தின் 4ஆவது தூணாக இருக்க கூடிய ஊடகங்களுக்கு போதுமான புரிதலை உருவாக்க வேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் திறந்த மடல் ஒன்றை முதல்வருக்கு எழுதி இருக்கின்றேன். அதனை உங்களுக்கும் வழங்கி இருக்கின்றேன், அதை படித்துவிட்டு கேள்வி எழுப்பலாம் என கூறி 2ஜி வழக்கில் வந்த தீர்ப்பின் விளக்கத்தை தெரிவித்தார். ஆதாரத்துடன் ஆ.ராசா பேசியது அதிமுகவினரை அதிர்ச்சி அடையவைத்தது.

Categories

Tech |