Categories
தேசிய செய்திகள்

உங்கள நம்பி தானே இருக்காங்க… நீங்களே இப்படி பண்ணலாமா… மேலாளர், மனைவி உள்பட 4 பேர் கைது…!!!

ஜார்க்கண்டில் உள்ள ஒரு காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததன் பேரில் அதன் மேலாளர் மற்றும் அவரின் மனைவி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் என்ற பகுதியில் அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மேலாளராக கர்பால் சிங் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்கு இருக்கும் சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்பி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் காப்பகத்தில் இருக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது மட்டுமல்லாமல், கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளையும் செய்துள்ளனர். இதையடுத்து காப்பக மேலாளர் மற்றும் அவரின் மனைவி புஷ்பா மற்றும் வார்டன் கீதா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து அந்த காப்பகத்தில் இருந்த 15 சிறுமிகள் மற்றொரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதால் அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Categories

Tech |