நீண்ட நாட்களாக அட்டகாசம் செய்து வந்த கரடியை வனத்துறையினர் கூண்டில் அடைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரடிகளின் அட்டகாசம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஊருக்குள் நுழையும் கரடிகள் அங்குள்ள பேக்கரி, கோவில் போன்ற இடங்களில் இருக்கும் கதவுகளை உடைத்து பொருட்களை நாசப்படுத்துவதால் அட்டகாசம் செய்யும் கரடிகளை விரைந்து பிடிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் வைத்த கூண்டில் மாட்டிய கரடி குட்டியை அதன் தாய் கரடி குண்டை உடைத்து குட்டியை மீட்டு சென்றுள்ளது.
இந்நிலையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் தாய் கரடி சிக்கிவிட்டது. இதனையடுத்து ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட அந்த கரடி குண்டியின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மரப்பலகையை உடைத்து தப்பிக்க முயற்சி செய்ததால் வனத்துறையினர் புதிய கூண்டை வரவழைத்து அதில் கரடியை மாற்ற முயற்சி செய்துள்ளனர். அதன்பின் வனத்துறையினர் தீ பந்தம் காட்டி கூண்டுக்குள் சிக்கிய கரடியை புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள கூண்டுக்குள் அடைத்து விட்டனர். இதனை தொடர்ந்து கூண்டுக்குள் அடைத்த கரடியை வாகனத்தில் ஏற்றி வனத்துறையினர் அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.