தேயிலை தோட்டங்களில் ஒற்றை கரடி சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் அப்பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் கரடி ஒன்று கடந்த சில நாட்களாக தேயிலைத் தோட்டப் பகுதியில் சுற்றித் திரிவதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து புகார் அளித்தும் வனத்துறையினர் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பின் தோட்டங்களில் சுற்றிவரும் கரடி குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கூண்டு வைத்து அட்டகாசம் செய்யும் கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.