Categories
அரசியல் மாநில செய்திகள்

தாடி வைத்துக் கொண்டு ….. பைத்தியக்காரன்….. கோமாளி …. அமைச்சரையே வசைபாடிய MLA …!!

அமைச்சர் உதயகுமாரை கடுமையான  வார்த்தைகளால் திமுக MLA ஜெ.அன்பழகன் பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்த போது ,  இலங்கை தமிழகர்களுக்கு இரட்டை குடியுரிமை தரப்படும் என்று ஏன் இந்த கபட நாடக ஆடுறீங்க. இதே மசோதா மேலவையில் வரும்போது இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக அதிமுக 11 பேர் , பாமக அன்புமணி என அனைவரும் எதிர்த்து ஓட்டு போட்டு இருந்தால் இந்த மசோதா தோற்றிருக்கும்.

தொடர்ந்து பேசிய அன்பழகன், இன்றைக்கு கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை பற்றி எரிவதற்கு அதிமுக அரசுதான் காரணம். இதற்க்கு திமுக துணை போய்கின்றது என்றும், 2003_ஆம் ஆண்டு திமுக அங்கம் வகித்த பாரதிய ஜனதா ஆட்சியில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார்களோ அந்த திருத்தத்துக்கு திமுக துணை போச்சின்னு பொய் பேசுகின்றார் அமைச்சர் உதயகுமார். தாடி வைத்துக்கொண்டு , ஒரு பைத்தியக்காரன் , கோமாளி பேசிட்டு இருக்கான் என்று அமைச்சரை கடுமையாக சாடினார்.

ஜெ.அன்பழகனின் இந்த பேச்சு சர்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அமைச்சரை இப்படி பேசலாமா ? என்று பல்வேறு தரப்பினர் முகம் சுளித்துள்ளனர். ஏற்கனேவே இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை அன்பழகன் ஒருமையில் பேசியதாக சட்டசபையில் அமளி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |